ப்ரூஸ்லீ இறந்தது எப்படி? வெட்டவெளிச்சமான 45 ஆண்டுகால மர்மம்!- வீடியோ ப்ரூஸ்லீ என்றாலே நினைவிற்கு வருவது குங்ஃக்பூ, டிராகன் மற்றும் அவரது தற்காப்பு கலை. இன்றும் குங்ஃக்பூ மற்றும் கராத்தேவிற்கு வித்தியாசம் தெரியாதவர்களுக்கு கூட, தனது வித்தியாசமான கத்தும் சப்தத்துடன் ப்ரூஸ்லீ எதிராளியை உதைத்து வீழ்த்தும் முறை நன்கு தெரியும். அந்த கத்தல் ப்ரூஸ்லீயின் இலட்சினை என்றே கூறலாம். எப்போதெல்லாம் தோன்றுகிறது, அப்போதெல்லாம் தேடி பார்த்து குதுகலிக்க இன்று யூடியூப் இருக்கிறது. ஆனால், பத்து, இருபது வருடங்களுக்கு முன்னர் அப்படி இல்லை. கேசட், வி.சி.டி வாங்கி பார்க்க வேண்டும். இல்லையேல், கேபிள் லைன் கொடுக்கும் அண்ணனிடம் ப்ரூஸ்லீ படம் போடுங்க என அடம்பிடிக்க வேண்டும். பிறகு, சில தமிழ் மொழி சேனல்களில் ஆங்கில மற்றும் வேறு மொழிப் படங்கள் மொழிமாற்றம் செய்யப்பட்டு ஒளிபரப்பியது எல்லாம் சொர்க்கமான காலம் என குறிப்பிடலாம். இந்த வாரம் ப்ரூஸ்லீ வாரம் என்றால் சிலரை கையிலேயே பிடிக்க முடியாது. பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும் உச்ச நாயகன்! உச்ச நாயகன்! மிக குறைந்த காலத்தி...